ஹோம் /நியூஸ் /சென்னை /

நெருங்கும் புத்தாண்டு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எப்படி போக வேண்டும்?

நெருங்கும் புத்தாண்டு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எப்படி போக வேண்டும்?

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Newyear 2023 Chennai route | புத்தாண்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மெரினா கடற்கரை, எலியாட் கடற்கரை மற்றும் பிறபொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவதால், சென்னை காவல்துறை சார்பில்  “உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்” என்ற நோக்கத்துடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1. கடற்கரை உட்புற சாலை 31.12.2022 அன்று 7 மணி முதல் 01.01.2023 அன்று 12 வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

2. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31ஆம் தேதி இரவு 8 மணி முதல் 1ஆம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

3. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

4. டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம் தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

5. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட். அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

6. ஜபாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில் பாரதி சாலை, விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), (லாயிட்ஸ் சாலை, நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை , டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.

7. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

6. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலான முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் 8 மணி முதல் ஊரகப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

8. அடையாரிலிருந்து பாரிஸ் நோக்கி செல்லும் மாநகர பெருத்துக்கள் அனைத்தும் தெற்கு சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவொரி. வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை  சந்திப்பு இராயப்பேட்டை கத்திட்ரல் ரோடு அண்ணா சாலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம்.

9. மாநகர பேருத்துக்கள் பாரிஸில் இருந்து அடையார். திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆர்பி சுரங்க வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எல் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம் கத்திட்ரல் ரோடு. வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

மற்ற ஏற்பாடுகள்:

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இக்கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல் / குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் /சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

First published:

Tags: Chennai, Chennai Traffic, New Year 2023, Newyear resolution, Traffic Rules