ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னைவாசிகளே உஷார்..! சிக்னல்ல பார்த்து போங்க - புது ரூல் இன்று முதல் அமல்

சென்னைவாசிகளே உஷார்..! சிக்னல்ல பார்த்து போங்க - புது ரூல் இன்று முதல் அமல்

மாதிரி படம்

மாதிரி படம்

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே தவறை மீண்டும் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் இன்று அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி, சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

  சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது, தமிழ்நாட்டில் வரும் 28-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது.அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் நண்பர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது.

  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அரசின் அவசர போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிக்க : வாகன ஓட்டிகளே உஷார்.. அமலுக்கு வந்தது புதிய போக்குவரத்து விதிகள்

  இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1,500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனி 15,000 முதல் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன் செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்

  சிக்னல் விதிகளை மீறுவோருக்கு வசூலிக்கப்பட்டு வந்த 100 ரூபாய், இனிமேல் 1,000 ரூபாயாக அதிகரித்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மியூசிக்கல் மற்றும் ஏர் ஹாரனை பயன்படுத்துவோருக்கு அபராத தொகை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

  பதிவுசெய்யப்படாத வாகனங்களை இயக்கினால், 2,500 ரூபாய் முதல்5,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். இதேப்போல், உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 2,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இது 5,000  ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிக்க : வாகன ஓட்டிகளே உஷார்.. போலீஸ் கிட்ட மாட்டுனா இதுதான் ஃபைன்.. முழு விவரம்!

  செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களில் செல்வோருக்கான அபராதம் முதல் முறை ஆயிரம் ரூபாயாகவும் இரண்டாம் முறை பத்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இருவரும் 500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இந்த விதிமீறலுக்கு தற்போது வரை 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

  புதிய போக்குவரத்து விதிகள்..

  குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், உடன் பயணிக்கும் நபர்கள் மீது வழக்கு (வாடகை கார், ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாது).ஆம்புலன்ஸ், தீயணைப்பு, அரசு அவசர வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் ரூ. 10,000 அபராதம்

  ரேஸ் நடத்தினால்..

  பழைய அபராதம் - ரூ-1000 - ரூ.1500

  புதிய அபராதம்- ரூ-15,000 (முதல் முறை)

  ஒரு முறைக்கு மேல்- ரூ.25,000

  வாகனத்தில் மாற்றம் செய்தால்..

  பழைய அபராதம் - ரூ-100

  புதிய அபராதம்- ரூ-1000

  சிக்னல் விதிமீறல்களுக்கு..

  பழைய அபராதம் - ரூ. 100

  புதிய அபராதம் - ரூ.500-1500

  மியூசிக்கல் & ஏர் ஹாரன் வைத்தால்..

  பழைய அபராதம் : ரூ.100

  புதிய அபராதம் : ரூ.500

  வாகன பதிவு இல்லாமல் இயக்கினால்..

  பழைய அபராதம் : ரூ.2500

  புதிய அபராதம் : ரூ.2500 - ரூ.5000

  உரிமம் இல்லாமல் இயக்கினால்

  பழைய அபராதம் : ரூ.2500

  புதிய அபராதம் : ரூ. 5000

  செல்போன் பேசிக் கொண்டே இயக்கினால்..

  பழைய அபராதம் : ரூ.1000

  புதிய அபராதம் : ரூ.1000 (முதல்முறை)

  ஒரு முறைக்கு மேல் -ரூ.10,000

  ஹெல்மெட் அணியாமல் இயக்கினால்..

  பழைய அபராதம் : ரூ.100

  புதிய அபராதம் : ரூ.500

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Motor, Motor Vehicles Amendment Bill 2019, Traffic Rules