சென்னை தி.நகரை சேர்ந்த மாற்று திறனாளி வேல்முருகன் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.சுமார் 100முறைக்கு மேலாக அரசு பணியில் சேர முயற்சித்து தோற்று போன இவர், 43 வயதாகிவிட்டதால் இனி அரசு வேலை கிடைக்காது என்ற விரக்தியில் தன் நண்பர்கள் மூலம் பெட்டிக்கடை வைக்க உதவி கேட்டுள்ளார்.
அப்போது விஜய் ரசிகர் ஒருவர் இவர் கடை அமைக்க சுமார் 70,000 ரூபாய் உதவி செய்து புதிய கடையை தயார் செய்தார். எனவே மாற்று திறனாளிகள் பெட்டி கடை அமைக்க வேண்டி மாநகராட்சி மூலம் மனு வழங்கிய நிலையில் அதன் மீது அனுமதி கிடைக்காத நிலையில் நீதிமன்றம் மூலம் சென்னை ஜி.என்.செட்டி சாலையில் இந்தியன் வங்கி அருகில் பெட்டி கடை அமைக்க அனுமதி பெற்றார்.
பின்னர் 7,000 செலவு செய்து கடையை அந்த பகுதியில் இறக்கி வைத்துவிட்டு இனி வாழ்க்கையில் நிம்மதியாக தன் இரண்டு குழந்தைகளை வளர்க்கலாம் என நினைத்துக்கொண்டிற்கும் போது தான் மாநகராட்சி அதிகாரி இந்த கடையை இங்கே வைக்க அனுமதி இல்லை என கூறி மாற்றுதிறனாளி வேல்முருகனுக்கு எந்தவித தகவலும் அளிக்காமல் கடையை அகற்றியுள்ளார்.
அவ்வாறு அகற்றும் போது கடையின் அனைத்து பகுதியும் நொறுங்கி கடையின் கால் பகுதிகள் முழுவதும் உடைந்துவிட்டது. தன் கனவாக நினைத்த கடையை குப்பை போல போட்டுள்ள நிலையை கண்டு கண்கலங்கிய வேல்முருகன் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டதற்கு அங்கே கடை வைக்க யார் அனுமதி கொடுத்தது? யாரை கேட்டு வைத்தாய்? கடையை அகற்றும் போது உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நியூஸ்18 தொலைக்காட்சி சார்பில் விளக்கம் கேட்டதற்கு
உரிய அனுமதி இல்லை எனவும் கடையை அகற்றும்போது கடை சிறிய அளவில் சேதமாகிவிட்டதாக கூறினார்.
Also see... இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடும் திருடன்..!
நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு இடத்தை சுட்டிக்காட்டி கடை வைக்க அனுமதி அளித்த பிறகும் வேறு என்ன ஆவணம் தேவை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மாற்று திறனாளிகள் துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதன் மீது கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் மாற்று திறனாளி வேல்முருகன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Vijay fans