ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க புதிய திட்டம்: அமைச்சர் நாசர் தகவல்!

சென்னையின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க புதிய திட்டம்: அமைச்சர் நாசர் தகவல்!

மழை நீர் வடிகால்

மழை நீர் வடிகால்

நியூஸ்18 தமிழ்நாடு செய்தியின் எதிரொலியால் ஆவடி  கன்னிகாபுரம் பகுதியில் அமைச்சர் நாசர், ஆவடி மாநகராட்சி ஆணையர் நேரில்ஆய்வு செய்தனர். அத்துடன் கன்னிகாபுரம் பகுதிக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மழைநீர் வடி கால்வாய் அமைக்க புதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Avadi, India

  சென்னையின்  புறநகர் பகுதியான ஆவடியில் விடிய விடிய விட்டு விட்டு பெய்த கனமழையின் காரணமாக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வசந்தம் நகர், பருத்திப்பட்டு JB எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

  ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் அருவி போல் வீட்டு வசதி வாரிய தெருக்களில் வெளியேறி வருகிறது. அதே போல் ஆவடி பணிமனை மற்றும்  திருமலைராஜபுரம் பகுதியிலிருந்து. கன்னிகாபுரம் வரும் மழை நீரானது வடிகால்வாயின் கொள்ளளவை மீறி தெருக்களில் வழிந்தோடி குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடி வருகிறது என செய்தி வெளியிட்ட நிலையில், கன்னிகாபுரம் மழைநீர் வடிகால்வாயில் வழிந்தோடும் பகுதியில் அமைச்சர் நாசர் அதிகாரிகளோடு நேரில் வந்து ஆய்வு செய்தார். தேங்கியுள்ள மழை நீரை ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீர் வடிகால் வகைகளில் ஏற்பட்டால் அடைப்புகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

  அதற்கு முன்னதாக ஆவடி வசந்தன் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற ஐயப்பாக்கம் ஏரிக்கு செல்லக்கூடிய புதிய மழைநீர் வடிகால் வாயை நேரில் சென்று கொட்டும் மழையில் பார்வையிட்டார். அங்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு 10 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால்வாய் தோன்றும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து விரைந்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்தியேக பேட்டியளித்த அமைச்சர் நாசர், ‘20 கோடி ரூபாய் செலவில் இந்த பகுதியில் புதிய கால்வாய் அமைக்கப்படும் எனவும் வரும் பருவ மழைக்குள் மழைதண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Rain water