வாகன ஓட்டிகள் சாலை மூடல் மற்றும் மாற்றுபாதைகள் குறித்து Google Map-ல் நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள பயன்படும் Road Ease என்ற செயலி துவக்க நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இதனை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “சாலை போக்குவரத்து நெருக்கடியை கண்டறிந்து மாற்று சாலையை பயன்படுத்த இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது கூகுள் மேப் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த செயலி அப்டேட் ஆகும் வசதிகொண்டது. இந்த செயலியில் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை எவ்வளவு நேரம் போக்குவரத்து மாற்றம், சாலை முடக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்ளலாம்.
புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதத்தொகையானது வரும் 28ம் தேதியிலிருந்து அமல்படுத்தபட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பருக்கு ரூ.500 வரை அபராதம். ஸ்டாப் லைன் விதிமீறலுக்கு ரூ.500-1500 அபராதம் விதிக்கப்படும். மேலும், பைக் ரேஸில் ஈடுப்பட்டு முதல் முறை பிடிபட்டால் 15 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசி முதல் முறை பிடிபட்டால் ரூ 1000 அபராதம். அதற்கு மேல் செல்போன் பேசி வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பாக மது அருந்தி இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவருடன் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த முறை சட்டத்தில் இடம் உள்ளது. அனைத்து வழக்கிலும் இந்த அபராதம் விதிக்கப்பட மாட்டாது. அதன் தன்மை பொருத்து உடன் செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக நீதி மன்ற உத்தரவு கடைபிடிக்கப்படும். தி.நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, என்.எஸ்.சி போஸ் சாலை, ஆகிய பகுதிகளில் தீபாவளி பாதுகாப்பு பலப்படுத்தப்படும். கண்காணிப்பு டவர் அதிக அளவில் வைக்கப்பட உள்ளது. மொபைலில் சந்தேகமான நபரை புகைப்படம் எடுத்து ஒப்பிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. பாடி- ஒன் கேமரா காவலர்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Police, Chennai Police Commissioner, Traffic Rules