Home /News /chennai /

சென்னையில் பிரபல மாலில் செயல்படும் ஹோட்டல் உணவில் புழு... உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் பிரபல மாலில் செயல்படும் ஹோட்டல் உணவில் புழு... உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

பூரியில் புழு

பூரியில் புழு

Namma veedu Vasanta Bhavan hotel : சமையலறையின் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த நாகா பரோட்டா மாவு பாக்கெட் ஓட்டை விழுந்த நிலையில் மாவு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை அண்ணா நகர் VR மாலில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சோலாப்பூரியில் புழு இருந்ததாக கொடுக்கப்பட்ட புகாரையடுத்து தற்போது உணவகத்தின் சமையலறையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


    வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சோலா பூரியில் புழு இருந்ததாகவும் மேலும் பூரிக்கு தயார் செய்து வைத்திருந்த பூரி மாவிலும் துர்நாற்றத்துடன் அதிக புழுக்கள் இருந்ததாக சென்னைகே,கெ, நகரை சேர்ந்த ஹேமாவதி என்பவர் நேற்று கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி  டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, ராமராஜ்,ஏழுமலை உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தின் சமையலறையை முழுவதுமாக ஆய்வு செய்து வருகின்றனர்.


     



     


    மேலும் சமையலறையின் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த நாகா பரோட்டா மாவு பாக்கெட் ஓட்டை விழுந்த நிலையில் மாவு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி