Home /News /chennai /

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாமக்கல் ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நாமக்கல் ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

நெடுஞ்சாலை துறை நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
நாமக்கல் மாவட்டம், ஜேடர் பாளையத்தில் உள்ள நெடுஞ் லைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு மற்றும் கடைகளை கட்டியுள்ளனர்.  கிராம மக்களால் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்பதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டு  வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டும் ஆஜராகாததால் ஆட்சியர் மற்றும் பொறியாளருக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய வாரண்டை பிறப்பித்து, அதை அமல்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Also see...கொள்ளு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை... ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்

பின்னர், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக கூறி புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai High court, Namakkal

அடுத்த செய்தி