ஹோம் /நியூஸ் /சென்னை /

என்னை பார்த்து காங்கிரஸும், பாஜகவும் பயப்படுகிறது... சீமான் அதிரடி!

என்னை பார்த்து காங்கிரஸும், பாஜகவும் பயப்படுகிறது... சீமான் அதிரடி!

சீமான்

சீமான்

Seeman pressmeet | சென்னை போரூரில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

தன்னை பார்த்து காங்கிரஸும், பாஜகவும் பயப்படுவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்குமரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியின் நடைபயணத்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. நமக்கு நாமே பயணத்தில் மு.க.ஸ்டாலினை நடக்க வைத்தவர்தான் தற்போது ராகுல்காந்தியையும் நடக்க வைக்கிறார். இருவருக்கு ஒரே இயக்குனர் தான் என பேசினார்.

மேலும், தமிழ்நாட்டில் தன்னை பார்த்து பாஜகவும், காங்கிரஸும் பயப்படுவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Congress President Rahul Gandhi, Rahul gandhi, Seeman