ஹோம் /நியூஸ் /சென்னை /

சதுரங்க வேட்டை படபாணியில் நடந்த வழிப்பறி.. அதிர்ஷ்ட ராசிக்கல் ஆசையைக் காட்டி முதியவரிடம் நகை பறிப்பு!

சதுரங்க வேட்டை படபாணியில் நடந்த வழிப்பறி.. அதிர்ஷ்ட ராசிக்கல் ஆசையைக் காட்டி முதியவரிடம் நகை பறிப்பு!

நூதன மோசடி

நூதன மோசடி

ராசிக்கல்லை வாங்கிய முதியவர் அது போலி கல் என்பதை அறிந்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tambaram | Chennai | Chennai [Madras]

  சென்னையில் விலை உயர்ந்த ராசிக்கல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி முதியவர் ஒருவரிடம் 1 சவரன் நகையை ஏமாற்றி சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  தாம்பரத்தில் சதுரங்க வேட்டை படபாடியில் நூதன முறையில் மோசடி அரங்கேறியுள்ளது.

  சதுரங்க வேட்டை படத்தின் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் முதியவரிடம் ஆசையைக் காட்டி ஒரு கும்பல் வழிப்பறி செய்யும். அப்படியான ஒரு வழிப்பறி தாம்பரத்திலும் நடந்துள்ளது

  சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் வள்ளலார் தெரு,

  பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன்(61). இவர் மகளின் சீமந்த நிகழ்ச்சிக்காக திருக்கழுகுகன்றத்தில் சென்று உறவினருக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு அங்கிருந்து பேருந்து மூலமாக தாம்பரம் வந்துள்ளார்.

  அங்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது,  முதியவரிடம் சென்ற மர்மநபர் ஒருவர் தன்னிடம் விலை உயர்ந்த ராசிக்கல் வைத்திருப்பதாகவும், இந்த ராசிக்கலை வைத்திருப்பவர்களை அதிஷ்டம் தேடி வரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய முதியவரும் அவரை முழுவதுமாக நம்பியுள்ளார்.

  இதையும் படிங்க | ரூ.12 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி... ரவுடியை காரில் கடத்திய நகைக்கடை உரிமையாளர்..

  தொடர்ந்து அவர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியதால், முதியவர் அன்பழகன், தான் அணிந்திருந்த தங்க செயின், மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார். பிறகு பதிலுக்கு அவரிடம் இருந்த ராசிக்கல்லையும் பெற்றுள்ளார்.

  ராசிக்கல்லை வாங்கிய முதியவர் அது போலி கல் என்பதை அறிந்து நகையை வாங்கி தப்பி சென்ற மர்மநபர் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Tambaram, Theft