சென்னை ஆவடி அடுத்த பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன்(32). பிரபல ரவுடியான இவர் தற்போது பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு யோகேஸ்வரன் வேலை முடிந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் யோகேஸ்வரன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் கழுத்து முகம், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை கண்ட யோகேஸ்வரனின் மனைவி அலறி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, ரவுடியை கொலை செய்துவிட்டு அந்த மர்ம கும்பல் தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி சென்றுள்ளனர். இதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் யோகேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோத தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது,
இதையடுத்து, ரவுடியை வீடுபுகுந்து வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : கன்னியப்பன் - ஆவடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Local News