ஹோம் /நியூஸ் /சென்னை /

பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த கணவர், 2வது மனைவி... கொலையா, தற்கொலையா என குழம்பும் போலிஸார்!

பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த கணவர், 2வது மனைவி... கொலையா, தற்கொலையா என குழம்பும் போலிஸார்!

விசாரணையில் போலீஸ் - கணவன் மனைவி இறப்பு

விசாரணையில் போலீஸ் - கணவன் மனைவி இறப்பு

Poonamallee | திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே வீட்டில் கணவன், மனைவி சடலமாக கிடந்த நிலையில் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Poonamallee, India

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்(40). இவருக்கு புவனேஸ்வரி மற்றும் பரிமளா ஆகிய இரு மனைவிகளும், 2 பிள்ளைகளும் இருந்தனர். இதில் புவனேஸ்வரி வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற நிலையில், பாண்டியனும், பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை பள்ளி முடிந்து பிள்ளைகள் வீட்டிற்கு வந்த போது பாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், பரிமளா தரையில் படுத்தபடியும் சடலமாக கிடந்துள்ளனர்.

  இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் சென்ற போலீசார் இறந்த கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் பாண்டியன் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தவர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.மேலும் கடந்த சில வாரங்களாக தனக்கு சரியான தூக்கம் வரவில்லை தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

  ' isDesktop="true" id="822486" youtubeid="pJcDjW2DKms" category="chennai">

  இந்த நிலையில் பாண்டியன் இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பரிமளா படுத்தபடி கழுத்து இறுக்கப்பட்டு இறந்த நிலையிலும் இருந்துள்ளனர். தனது இரண்டாவது மனைவி பரிமளா மேல் மிகுந்த பாசம் கொண்ட பாண்டியன் பரிமளாவின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு பரிமளா மாத்திரை ஏதாவது சாப்பிட்டு இறந்து போனாரா? அல்லது இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், இருவரின் இறப்பிலும் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார் விசாரித்து வருகின்றனர். இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் கடைசியாக இருவரும் யாரிடம் எல்லாம் பேசினார்கள் என்பது குறித்தும்  ஆய்வு செய்து வருகின்றனர்.

  Also see... தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை..!

  வீட்டின் கதவுகள் ஏதும் பூட்டப்படாததால் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime News, Dead, Husband Wife