Home /News /chennai /

ரயிலில் இருப்பது போன்று மாநகர பேருந்துகளில் புதிய வசதி... இனி பயணிகளுக்கு சிக்கல் இருக்காது

ரயிலில் இருப்பது போன்று மாநகர பேருந்துகளில் புதிய வசதி... இனி பயணிகளுக்கு சிக்கல் இருக்காது

மாநகர பேருந்துகளில் நிறுத்தம் அறிவிப்பு சேவை

மாநகர பேருந்துகளில் நிறுத்தம் அறிவிப்பு சேவை

மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் சேவை தொடங்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) பயணிகள் பேருந்துகளில் ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் புதிய தொழில்நுட்ப சேவையைத் தொடங்க உள்ளனர்.

    சென்னையில் மாநகர பேருந்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு ஜிபிஎஸ் மூலம் பேருந்துகளில் நிலையைத் தெரிந்துகொள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதே நிறுத்தத்தை ஜிபிஎஸ் மூலம் அறிவிக்கும் வசதியைக் கொண்டுவர உள்ளனர். முதற்கட்டமாக தற்போது 500 பேருந்துகளில் 6 ஒலிபெருக்கி சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வயரிங் பணி நடைபெற்றுவருவதாக மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மேலும் 1000 பேருந்துகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சேவை 6000க்கு மேற்பட்ட நிறுத்தங்களுக்கு வருகிறது. பேருந்து நிறுத்தம் வருவதற்கு 250 இல் இருந்து 200 மீட்டர் முன்பே அந்த நிறுத்தத்திற்கான அறிவிப்பு வந்துவிடும். இதனால் பயணிகளுக்கு நிறுத்தத்தைப் பற்றிய கவலை இல்லாமல் எளிதாகப் பேருந்தில் பயணம் செய்ய உதவும்.

    Also Read : சொகுசு கார்கள், கோட் சூட்டுகள், ராஜதோரணை உடன் பந்தா... டாக்டரிம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது

    தற்போது இந்த சேவை தமிழ் மொழியில் மட்டுமே வருகிறது. இந்த சேவையின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆங்கில மொழியும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் அனைத்து பேருந்துகளிலும் இடம் கண்காணிப்பு செயலி பொருத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு சேவையும் சாதாரண, விரைவு மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூடிய விரைவில் பேருந்துகளில் கையால் எழுதப் பட்ட பலகை அகற்றப்பட்டு டிஜிட்டல் பலகைகள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Bus, Chennai, GPS, MTC

    அடுத்த செய்தி