ஹோம் /நியூஸ் /சென்னை /

எஸ்.பி.ஐ தேர்வு தேதியை மாற்றுக - சு.வெங்கடேசன் எம்.பி வங்கியில் உள்ளிருப்பு போராட்டம்!

எஸ்.பி.ஐ தேர்வு தேதியை மாற்றுக - சு.வெங்கடேசன் எம்.பி வங்கியில் உள்ளிருப்பு போராட்டம்!

மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம்

மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம்

பொங்கல் அன்று நடைபெறும் எஸ்.பி.ஐ தேர்வை ஒத்திவைக்கக் கோரி சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் அன்று நடைபெறும் எஸ்.பி.ஐ தேர்வை ஒத்திவைக்கக் கோரி நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி பொதுமேலாளர் அறையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.

எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் முதன்மை தேர்வுக்கான தேதி தமிழர் திருநாள் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர்கள் தேதி எழுவதில் அவதியும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வு மாநில அரசு விடுமுறையைக் கணக்கில் கொள்ளலாம் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வு தேதியை மாற்றியமைக்கத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி எதிரே மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் இன்று காலை போராட்டம் மேற்கொண்டார்.

Also Read : முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு : சகோதரர் கௌசே ஆதாம்பாஷா பரபரப்பு வாக்குமூலம்!

அதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தை நடத்த வங்கி ஊழியர்கள் அழைத்த நிலையில், உயரதிகாரிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்காததால் சு.வெங்கடேசன் வங்கி பொதுமேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

First published:

Tags: Bank Exam, SBI Bank, Su venkatesan