ஹோம் /நியூஸ் /சென்னை /

ரயிலில் தள்ளி மாணவி கொலை... சிபிசிஐடி போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த சதீஷ்

ரயிலில் தள்ளி மாணவி கொலை... சிபிசிஐடி போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த சதீஷ்

கொலையாளி சதீஷ்

கொலையாளி சதீஷ்

சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கோரிய நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட வழக்கில், காதலிக்க மறுத்து வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தால் திட்டமிட்டு கொலை செய்தாக சிபிசிஐடி போலீசாரிடமும் கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்,  கடந்த 13ம் தேதி கல்லூரி மாணவியான  சத்யாவை  சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதனையடுத்து தலைமறைவான சதீஷை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சென்னை துரைபாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.

  விசாரணையில், சத்யாவை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டதாகவும், அதற்குள் தன்னை பிடிக்க பொதுமக்கள் வந்துவிட்டதாகவும் பொதுமக்கள் பிடித்தால் தன்னை அடிப்பார்கள் என அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து சதீஷ், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

  இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கோரிய நிலையில் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

  இதையும் வாசிக்க: சென்னையில் திருடப்பட்ட பைக் கடலூரில் வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம்... ஆர்.டி.ஓ அதிகாரிகள் மீது புகார்

  அதன்படி, சதீஷை பரங்கி மலையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் காதலிக்க மறுத்து வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் திட்டமிட்டு ரயிலில் தள்ளி கொலை செய்தாக சிபிசிஐடி போலீசாரிடமும் கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CBCID Police, Girl Murder