ஹோம் /நியூஸ் /சென்னை /

பெற்ற குழந்தைக்கு பால் தர முடியாததால் மன உளைச்சலில் தாய் தற்கொலை : சென்னையில் சோகம்!

பெற்ற குழந்தைக்கு பால் தர முடியாததால் மன உளைச்சலில் தாய் தற்கொலை : சென்னையில் சோகம்!

தாய் தற்கொலை

தாய் தற்கொலை

சென்னை கொடுங்கையூரில் பிறந்த குழந்தைக்கு பால் தர முடியாததால் மன உளைச்சலில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆஷா ( 24) . இவரது கணவர் அமீன் பாஷா (30) . இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆகி ஆஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது கடந்த செப்டம்பர் மாதம் அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். தற்போது குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆகிறது. ஆஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

தற்பொழுது குழந்தையும் ஆஷாவும் கொடுங்கையூரில் உள்ள ஆஷாவின் அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு தூங்கிய போது திடீரென்று சத்தம் கேட்டு ஆஷாவின் அம்மா அஸ்மத் பீவி என்பவர் மதியம் மூன்று மணி அளவில் எழுந்து பார்த்தார்.

அப்போது ஆஷா இல்லாததால் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த இரும்பு கம்பியால் புடவையால் ஆஷா தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார.  அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இது குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினார்.

Also see... ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை கொன்ற கணவர்.. விபத்துபோல் நாடகமாடியது அம்பலம்.!

விசாரணையில் குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆன நிலையில் குழந்தைக்கு சரிவர பால் கொடுக்க முடியாத காரணத்தினால் ஆஷா மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Commit suicide, Crime News, Mother