ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆடம்பர திருமணம்.. நட்பாக பழகி ரூ.11 லட்சம் மோசடி.. தாம்பரத்தில் தாய், மகள் கைது..!

ஆடம்பர திருமணம்.. நட்பாக பழகி ரூ.11 லட்சம் மோசடி.. தாம்பரத்தில் தாய், மகள் கைது..!

தாம்பரம்

தாம்பரம்

தாம்பரம் அருகே மகள் திருமணத்துக்காக லட்சக் கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த தாயால் திருமணமாகி சில மாதத்தில் மகள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tambaram, India

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (50). இவருக்கு ரெஜிகுமார் (47) என்ற மனைவி மற்றும் ஜூலி (25) என்ற மகள் உள்ளனர். உதயகுமார் கடந்த 2014ம் ஆண்டு இறந்துவிட்டதால் தாயும் மகளும் தனியாக வசித்து வருகின்றனர். ரெஜிகுமார் எல்ஐசி ஏஜென்ட் ஆகவும், ஜூலி சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ரெஜிகுமார், மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்த சையது காலில் அகமது, மோகன், பிரேமா, அப்துல் ரகுமானிடம், மணிகண்டன் என இவர்கள் அனைவரிடமும் 11 லட்சம் ரூபாய் வரை நட்பாக பழகி கடன் பெற்றுள்ளார்.

மேலும் அனைவரையும் அழைத்து ஆடம்பரமான முறையில் மகள் திருமணத்தை நடத்தியுள்ளார். சில மாதங்கள் கழித்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட பொழுது பணம் எல்லாம் தர முடியாது நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லிக்கொள் என கூறி மிரட்டியுள்ளார்.

Also see... அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து விபரீத முடிவு.! விசாரணை தீவிரம்!

இதையடுத்து ரெஜிகுமார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

இதனால் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் என அனைவரும் ஒன்று சேர்ந்து, நேற்று மாலை கிழக்கு தாம்பரத்தில் மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை வழிமறித்து வாங்கிய கடனை தரும்படி கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து எந்த பிரச்னையாக இருந்தாலும் காவல் நிலையம் வந்து தீர்த்து கொள்ளுங்கள் என கூறி அழைத்து சென்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  திருமணத்திற்காக பலரிடம் 11 லட்சம் வரை கடன் பெற்று  மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மகள் 2 பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரெஜிகுமார் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காகவும் வரதட்சணையாக கார் கொடுப்பதற்காகவும் வரவிற்கு மீறி கடன் வாங்கியதால் தாய், மகள் இருவரும் ஜெயிலுக்கு சென்றதோடு மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது.

First published:

Tags: Cheating case, Tambaram