ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆபத்தை விளைவிக்கும் 850க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல்... சென்னையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆபத்தை விளைவிக்கும் 850க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல்... சென்னையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

Dangerous Toys Confiscated : சென்னையில் குழந்தைகளுக்கு எளிதில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பல லட்சம் மதிப்புக்கொண்ட 850க்கும் மேற்பட்ட பொம்மைகளை இந்திய தர கட்டுப்பட்டு நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை OMR சாலையில் அமைந்துள்ள Kidz-on என்ற பொம்மை கடையில் குழந்தைகளுக்கு எளிதில் ஆபத்தை விளைவிக்க கூடிய போலி பொம்மைகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் நேற்று மாலை kidz-On என்ற பொம்மைக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பல லட்சம் மதிப்பு கொண்ட 850க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய சென்னை மண்டல இயக்குநர் பவானி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை(ISI) இல்லாத எளிதில் தீப்பற்றக்கூடிய பொம்மைகள், கூரான முனைகள் கொண்ட பொம்மைகள், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக் அல்லாத பொம்மைகள், பறக்கும் பொம்மைகள், தண்ணீரில் மிதக்கும் பொம்மைகள் என பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட 850க்கும் மேற்பட்ட பொம்மைகளை இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.2-6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் இருக்கக்கூடிய TIARA TOYS ZONE என்ற பொம்மை கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது சுமார் ரூ.3 லட்சம் மதிப்புக்கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் ஆபத்தை விளைவிக்கும் பொம்மைகள் விற்கபடுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும், இவை எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. எங்கு தயாரிக்கப்படுகிறது என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு... நாளை முன்பதிவு தொடக்கம்

அதேபோல், போலி பொம்மைகள் குறித்த புகார்களுக்கு BIS Care செயலியை பயன்படுத்தியோ அல்லது cnba1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Chennai, Crime News, Local News