Home /News /chennai /

காதலியிடம் செல்போனில் சத்தமாக பேச்சு.. 20க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைப்பு

காதலியிடம் செல்போனில் சத்தமாக பேச்சு.. 20க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைப்பு

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

Velachery : சென்னை வேளச்சேரியில், சத்தமாக போன் பேசிய இருவரை சட்டகல்லூரி மாணவர்கள் சரமாரி தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வேளச்சேரி, அம்பிகா நகரை சேர்ந்தவர் வெற்றி செல்வன்(28), இவர் ஐஐடியில் சிவில் பிரிவில் காங்கீரிட் கலவை தணிக்கை செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் வெற்றிசெல்வன் மற்றும் அவரது நண்பர் சரவணன்(22), இருவரும் மது அருந்திவிட்டு வேளச்சேரி டான்சி நகர் அருகே டீக்கடை வெளியே சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வெற்றி செல்வன் அவரது காதலியிடம் செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சுரேஷ் (25), என்பவர் வேடிக்கை பார்த்துள்ளார். ஏன் என்னையே பார்க்கிறாய் என கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உடனே வழக்கறிஞர் சுரேஷ், சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 க்கும் மேற்பட்டோரை வரவழைத்து இருவரையும் சரமாறியாக தாக்கியுள்ளனர். கற்களை கொண்டு தாக்கியதில் வெற்றி செல்வனுக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    இரு தரப்பும் மோதிக் கொண்டது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    Must Read : வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது

    படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இரு தரப்பும் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அடையார் துணை ஆணையர் மகேந்திரன் நேரில் வந்து சட்டக் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Law

    அடுத்த செய்தி