Home /News /chennai /

பணத்தை பங்குபோடுவதில் தகராறு - ஆவடியில் இளைஞர் அடித்துக் கொலை

பணத்தை பங்குபோடுவதில் தகராறு - ஆவடியில் இளைஞர் அடித்துக் கொலை

ஆவடி கொலை சம்பவம்

ஆவடி கொலை சம்பவம்

Chennai : ஆவடியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் பிரபு சதீஸ் உட்பட 3 பேர் திருவள்ளூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    ஆவடியில் தண்ணீர் விற்ற பணம் ரூபாய் 10,000 பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதால் தண்ணி லாரி உரிமையாளர் மனோஜ் என்பவர்  இரும்பு ராடால் அடித்தே கொலை செய்யப்பட்டார்.

    ஆவடி கவுரிபேட்டை கம்பர் தெருவை சேர்ந்தவர்  மனோஜ் (வயது 25).  இவர் சொந்தமாக ட்ராக்டர் வைத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலில் செய்து வந்தார். ஏற்கனவே பிரபு சதீஸ் உள்ளிட்ட 3 பேரால் ஏற்கனவே தண்ணீர் விற்ற பணம் 10,000 பங்கு போடுவதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் ஆவடி  பகுதியில் மனோஜ் தண்ணீர் வினியோகம் செய்து கொண்டிருந்தார்.  மனோஜ்  டிராக்டரில் வரும் பொழுது வழிமறித்து பிரபு சதீஸ் உள்ளிட்ட 3 பேரால் இரும்பு ராடால் அடித்தே கொலை செய்யப்பட்டடார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் மற்றும் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம்  விஜயராகவன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    விசாரணையில் ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த பிரபு சதீஸ் , பட்டாபிராமை சேர்ந்த கலையரசன்  உள்ளிட்ட 3 பேர்  மனோஜை  இரும்பு தடியால் அடித்துக் கொண்றது அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது .அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் பிரபு சதீஸ் உட்பட 3 பேர் திருவள்ளூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சலம் உள்ளிட்ட தனிப்படை போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai Police, Crime News, Murder, Youth dead

    அடுத்த செய்தி