ஹோம் /நியூஸ் /சென்னை /

'பூங்கா.. பஸ்.. இனி மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் உகந்தவையாக இருக்கும்' - உறுதி அளித்த உதயநிதி

'பூங்கா.. பஸ்.. இனி மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் உகந்தவையாக இருக்கும்' - உறுதி அளித்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

பூங்கா உட்பட பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவையாக இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, இவர்களுக்கு பூக்கள் கொடுத்து மாணவர்கள் வரவேற்றனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளி மாணவர்களை, தன்னார்வலர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நகரை சுற்றிக்காட்டினர். இதற்கான பயணத்தை உதயநிதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உரையாடினார். இதில், மாணவர் ஒருவர், கீ போர்டு வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொது இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தவையாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக உருவாக்குவது, மற்ற பல கோரிக்கைகள் குறித்து நானும் சட்டசபையில் பேசியுள்ளேன் என குறிப்பிட்டார்.

அப்போது திராவிட மாடல் என்பதே நாங்கள் உருவாக்கியது என எடப்பாடி கூறியது குறித்து கேட்டதற்கு 'அப்படியா, நல்லா இருக்கே' என  கூறி சென்றார்.

First published:

Tags: Chennai, Physically challenged, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin