ஹோம் /நியூஸ் /Chennai /

மெரினா கடல்அலையில் சிக்கி ஆந்திர இளைஞர் மாயம்.. தேடும்போது மற்றொரு இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

மெரினா கடல்அலையில் சிக்கி ஆந்திர இளைஞர் மாயம்.. தேடும்போது மற்றொரு இளைஞரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை

கடல் அலையில் சிக்கி மாயமான பி.டெக் மாணவர் சாய்சரணை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை மெரினா பீச்சில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை குளித்துக்கொண்டிருந்த போது திடிரென கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார் .இதனை தொடர்ந்து அண்ணா சதுக்கம் போலீசார் தீயணைப்பு துறையினருடன் நேற்று மாலை முதலே கடலலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவனை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக  அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் கடலலையில் சிக்கி காணாமல் போன இளைஞர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான சாய் பிரகாஷ் என்பது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று காலை சென்னை வந்துள்ளார்.

நேற்று காலை திருமணம் முடித்துவிட்டு மாலையில் தனது நண்பர்களோடு மெரினா பீச்சில் குளிக்க வந்ததும், அப்போது கடலலையில் சிக்கி மாயமானதும் தெரியவந்தது. மேலும், சாய் பிரகாஷின் தந்தை ஆந்திராவில் போலீஸாக பணியாற்றி வருகிறார் என்பது தெரிய வந்தது.

Also Read: பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள வாலிபர்.. சதிவேலையா? - சென்னையில் சிக்கிய நபரிடம் தீவிர விசாரணை

இந்த நிலையில் தீயணைப்புத் துறையினரோடு அண்ணா சதுக்கம் போலீசார் இணைந்து இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்த கொரட்டூரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பரமசிவம் என்பவர் கடல் அலையில் சிக்கி உள்ளார். இதனை பார்த்த தீயணைப்புத்துறையினர் கடலில் குதித்து பரமசிவன் என்ற இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது பரமசிவம் என்ற இளைஞர் நல்ல நிலையில் உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடல் அலையில் சிக்கி மாயமான பி.டெக் மாணவர் சாய்சரணை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கடந்த 3ஆம் தேதி ஈஞ்சம்பாக்கம் விஜிபி அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பூபதி என்ற 14 வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி மாயமானார். நேற்று மதியம் அந்த சிறுவனின் உடல் பட்டினம்பாக்கம் முகத்துவாரத்தில் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை மீட்ட பட்டினம்பாக்கம் போலீசார் ராயப்பேட்டை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.ச்ன்ன்

Published by:Ramprasath H
First published:

Tags: Chennai, Marina Beach, Tamil Nadu, Tamil News