ஹோம் /நியூஸ் /சென்னை /

’அவருக்கு வரலாறும் தெரியல ; அரசியலும் தெரியல’ - அண்ணாமலையை சாடிய அமைச்சர் பொன்முடி..!

’அவருக்கு வரலாறும் தெரியல ; அரசியலும் தெரியல’ - அண்ணாமலையை சாடிய அமைச்சர் பொன்முடி..!

அண்ணாமலை - பொன்முடி

அண்ணாமலை - பொன்முடி

ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களிலும் உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நடந்து கூட செல்லமுடியாது. தற்போது அப்படி ஒரு சம்பவம் எங்காவது நடக்க முடியுமா? இவை அனைத்தும் பெரியார் போட்ட பிச்சை என்பதை யாராலும் மறக்க முடியாது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Ambattur | Chennai | Tamil Nadu

  பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  இதில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றார் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்த ஒன்று, அதை துக்ளக் ஆசிரியரே ஒப்பு கொண்டுள்ளார் என்றும், அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை அப்படிபட்டவரை தலைவராக நியமித்து நமது உயிரை வாங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

  ALSO READ | மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுவர ஆகும் செலவை அரசே ஏற்கும் -அமைச்சர் செஞ்சி மஸ்தான்

  'மேலும், கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினைகள் ஏற்படுத்த கூடாது என்பதைத்தான் பெரியார் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களிலும் உயர்ந்த சாதி மக்கள் இருக்கும் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நடந்து கூட செல்லமுடியாது. தற்போது அப்படி ஒரு சம்பவம் எங்காவது நடக்க முடியுமா? இவை அனைத்தும் பெரியார் போட்ட பிச்சை என்பதை யாராலும் மறக்க முடியாது' என்று கூறினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai, DMK, Minister Ponmudi