அதிமுக பொதுக்குழுவில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை அதிமுகவினர் கடைப்பிடிப்பார்கள் என நம்புவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மதுரவாயலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது 144 வது வட்டம் சார்பில் நடைபெற்றது. இந்த தெருமுனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ. க்கள் கணபதி, பிரபாகராஜா, 11ஆவது மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் என பலர் பங்கேற்று இருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பேச்சாளர் சைதை சாதிக் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா, சுப்பிரமணியன் கூறுகையில், முக கவசம் அணிவது கட்டாயம் என்பது குறித்து எந்த விளக்கமும் தற்போது வரை தரப்படவில்லை. முகக் கவசம் அணிவதில் எந்த தளர்வும் இல்லை தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கும் நிகழ்ச்சியில் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து துறைகளும் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முககவசம் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், பெரும்பாலும் 95 சதவீதம் இதுவரை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள், 5 சதவீதம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், மருத்துவமனைகளில் போதுமான கட்டமைப்புகள் இருக்கிறது. மருத்துவமனையில் கொரானோ நோயாளிகள் அனுமதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசியல் நிகழ்சிசிகளுக்கு எந்த விதமான தடையும் இதுவரை இல்லை. அதிமுக பொதுக்குழுவில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் விதிமுறைகளை அதிமுகவினர் கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.
Must Read :உணவகங்கள் தனியாக சேவை வரி வசூலிக்கக் கூடாது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
இந்நிலையில், வருகின்ற 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெறவிருக்கும் அதிமுக பொது குழு கூட உள்ள இடத்தில் ஏதும் தமிழக அரசு சார்பில் ஆய்வுகள் உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார்,
செய்தியாளர் - சோமசுந்தரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Corona, Ma subramanian