முகப்பு /செய்தி /சென்னை / நீட் விலக்கு மத்திய அரசின் கேள்விக்கு ஓரிரு நாட்களில் பதில் - மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மத்திய அரசின் கேள்விக்கு ஓரிரு நாட்களில் பதில் - மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

NEET விலக்கு மசோதா குறித்த மத்திய அரசின் கேள்விக்கு ஓரிரு நாட்களில் பதில் அனுப்பப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

நீட் விலக்கு மசோதா குறித்த மத்திய அரசின் கேள்விக்கு ஓரிரு நாட்களில் பதில் அனுப்பப்படும் என்றும், அதற்கான பதில்கள் சட்ட வல்லுநர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு  வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் பயன்பெறும் வகையில் ஈஷா யோகா மையம் சார்பில் வழங்கப்பட்ட 4 லட்சம் N95 முககவசங்களை தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட இணை இயக்குநர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனை தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டம் மற்றும் வாடகை தாய் சட்டம் குறித்து இணை இயக்குநர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈசா அமைப்பின் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் முக கவசங்கள் வழங்கியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு இந்த முக கவசங்கள் வழங்கப்படும்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்த இணை இயக்குநர்களுக்கான கருத்தரங்கில் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தவும், தொடர் காண்காணிப்பில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

கடந்த வாரம் தமிழகத்தில் 4 செயற்கை கருத்தரித்தல் மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றதால் சேலம், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனையில் ஸ்கேன் செண்டர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.  சேலம் சுதா, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனையில் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பதி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களும் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 190 செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றறிக்கை மூலம் அனுப்பப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

Must Read : அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் - இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்

மேலும், நீட் விலக்கு மசோதா குறித்த மத்திய அரசின் கேள்விக்கான பதில்கள் சட்ட வல்லுநர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை, முதலமைச்சரிடம் அனுமதி பெற்று ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Ma subramanian, Neet Exam