Home /News /chennai /

சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

Ma Subramanian : சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ள உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுபவன் தான் என்று கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை தீவுத் திடலில் இன்று முதல் மூன்று நாள் உணவுத் திருவிழா (ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளில்) நடைபெருகிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இந்த விழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெற இருகிறது.

    ஈட் ரைட் இந்தியா என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒரு முன்முயற்சியாகும். இது இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ஊட்டச்சத்துப் போக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கும் உருவாக்கப்பட்டது.

    கலாச்சார நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மகளிர் சுயஉதவி குழுக்களின் தங்களின் சமையல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இங்கே, ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பாரம்பரிய உணவு வகை முதல் பிரியாணி வகைகள் வரை ஏராளமான உணவுகள் கிடைக்கின்றன. இந்த உணவுத் திருவிழாவானது மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சல் சேகர் பாபு ஆகியோர் "சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022" ஐ தொடங்கி வைத்தனர்.  பின்னர் அவர் விழா மேடையில் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கடந்த ஆண்டு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 3 அறிவிப்புகள் உணவு பாதுகாப்பு துறையோடு தொடர்புடையவை என்று கூறினார்.



    உணவு விடுதிகள் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மீண்டும் உபயோகிக்காமல், அரசிடம் கொடுத்தால், அதை லிட்டர் 30 ரூபாய்க்கு அரசு பெற்றுக்கொள்கிறது என்றும், இதனை கொண்டு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது என்றும் கூறிய அமைச்சர், அதன்படி, ஒரு வருடத்தில் மட்டும் 23.33 லட்சம் லிட்டர் எண்ணெய் மறுசுழற்சிக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெரிய நிகழ்வுகளில் வீணாகும் உணவுகள், உணவு இல்லாதவர்களுக்கு அளிக்கும் வகையில், 35,142 நிகழ்சிகள் நடைபெற்று உள்ளது என்றும், இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். உணவு பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றும் கூறினார்.

    Must Read : தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரீசிலினை - தகவல்

    இந்த உணவுத் திருவிழாவில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், இங்கே பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைக்கப்படவில்லை என்றார். மேலும், இங்கு அதற்கான அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதுதான் அதற்னாக காரணம் என்று விளக்கம் தெரிவித்த மா.சுப்பிரமணியன், நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுபவன் தான் என்றும் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Beef, Food Festival 2022, Ma subramanian

    அடுத்த செய்தி