ஹோம் /நியூஸ் /சென்னை /

''7 புத்தகம் இப்போதே தயார்'' அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

''7 புத்தகம் இப்போதே தயார்'' அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

அமித்ஷா - மா.சுப்பிரமணியன்

அமித்ஷா - மா.சுப்பிரமணியன்

ஓராண்டுக்கு முன்பே மருத்துவ கல்லூரி தமிழ் வழியில் பயில வேண்டும் என்று தமிழில் மொழிபெயற்பட்டு தயார் நிலையில் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai

  அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய் மொழியில் கற்றால் புரிதல் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  உலக நீரிழிவு தினத்தையொட்டி சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசி, கோதுமையில் ஒரே அளவில் தான் புரதம் உள்ளது. ஆனால் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் வட மாநிலங்களில் அரசி சாதம் சாப்பிட வேண்டும் என்றும்

  நம்மை சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  எதற்கு வம்பு என்று சர்க்கரை நோய் பரிசோதனை செய்யாமல் மக்கள் உள்ளதால் சர்க்கரை நோய் சரியான கணக்கிடூ செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

  ஆனால் தமிழக அரசு 72சதவிகிதம் மக்களில் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துள்ளோம், அதில், சென்னையில் 40% மக்களிடம் பரிசோதனை நடத்தி இருக்கிறோம். இந்தியாவில் 10ல் இருந்து 12%, தமிழகத்தில் 13சதவிகிதம் என்ற விகிதத்தில் சர்க்கரை நோய் உள்ளது என தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க | தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகள் - நியூஸ் 18 பிரத்யேக கழுகுப்பார்வை காட்சிகள்

  நீரழிவு நோய்க்காக ஓட துவங்கிய நான் இன்று உலக சாதனை படைக்கும் அளவுக்கு ஓடியுள்ளேன். விளையாட்டில் விருப்பம் இல்லாத எனக்கு சர்க்கரை நோய் தான் ஓட வேண்டும் என்ற என்ற எண்ணத்தை தூண்டியது. இன்று காலை 15 கிமீ ஓடிவிட்டு தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என கூறினார்

  1995ல் எனக்கும் நீரழிவு தாக்கம் இருந்தபோது இன்னும் 20 வருடம் மட்டுமே உயிர் வாழ முடியும் என்கிற அளவுக்கு தான் மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் எனது உடற்பயிற்சி மூலம் தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் உள்ளது என தெரிவித்தார்.

  மேலும், அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பே மருத்துவ கல்லூரி தமிழ் வழியில் பயில வேண்டும் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது 14 புத்தகங்கள் உள்ளது அதில் 7 புத்தகம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் தமிழக முதல்வர் புத்தகத்தை வெளியிட உள்ளார். தாய் மொழியில் கற்றால் புரிதல் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Amith shah, Chennai, Diabetes, Ma subramanian