ஹோம் /நியூஸ் /சென்னை /

’மெட்ரோ வயர்.. கரண்ட் வயர்.. மரமெல்லாம் இருக்கு’ - மழை நீர் வடிகால் லேட் குறித்து பரபரவென பேசிய கேஎன் நேரு!

’மெட்ரோ வயர்.. கரண்ட் வயர்.. மரமெல்லாம் இருக்கு’ - மழை நீர் வடிகால் லேட் குறித்து பரபரவென பேசிய கேஎன் நேரு!

 10 அடி சாலையில், 5 அடி சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒதுக்குவதால் தான் இணைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

10 அடி சாலையில், 5 அடி சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒதுக்குவதால் தான் இணைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

10 அடி சாலையில், 5 அடி சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒதுக்குவதால் தான் இணைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைய ஒன்று முதல் ஒன்றரை மாதம் வரை ஆகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகரம் முழுவதும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும் மழை காலங்களில் என்ன நடக்க போகிறதோ என  மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

  இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

  ALSO READ | சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம்: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

  இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

  இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 15ஆம் தேதிக்குள் எப்படி வடிகால் பணிகளை முடிக்க முடியும், பள்ளம் தோண்டும்போது, உள்ளே மெட்ரோ வயர், மரம், எலெக்ட்ரிசிட்டி வயர் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு செய்வதில் சிரமம் உள்ளது என தெரிவித்தார்.

  மேலும், 10 அடி சாலையில், 5 அடி சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒதுக்குவதால் தான் இணைப்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைய ஒன்று முதல் ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

  இந்த பணிகள் நிறைவடைவதற்குள் மழைநீர் வந்தால் அதை எடுப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, KN Nerhu