பெரம்பூர் திருவிக நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம் (27) இவர் அப்பகுதியில் பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருக்கும்
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி (24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆடி மாதம் என்பதால் இருவரும் பிரிந்து இருக்க வேண்டி குடும்பத்தினர் கூறியதால், தனலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஷயாம் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டதால் வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை பிரபாகரன் அலறி அடித்துக் கொண்டு கீழே வந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் புகை மண்டலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த அறை உள்புறமாக தழிடப்பட்டிருந்ததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்த்த போது ஏசி (AC) வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகிய நிலையில் பால் வியாபாரியான தனது மகன் ஷியாம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Must Read : தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது... ஆம்பூரில் பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிக நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - கன்னியப்பன்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.