ஹோம் /நியூஸ் /சென்னை /

“எம்.ஜி.ஆர் படத்திற்கு முதல் ஆளாக செல்வேன்“ - நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

“எம்.ஜி.ஆர் படத்திற்கு முதல் ஆளாக செல்வேன்“ - நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர்

முதலமைச்சர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர்

எம்ஜிஆர் தன் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு தனக்கு கிடைக்க வேண்டுமென எம்ஜிஆர் அறிவுரை வழங்கியதாகவும் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் வெளியாகும்போது முதல் நபராக படத்திற்கு செல்வேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அப்போது, கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர், அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் சிறப்பு மலர், ஆவணப் பட குறுந்தகடு மற்றும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நூல் ஆகியவற்றை வெளியிட்டார்.

அதன்பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எம்ஜிஆர் தன் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு தனக்கு கிடைக்க வேண்டுமென எம்ஜிஆர் அறிவுரை வழங்கியதாகவும் கூறினார்.

' isDesktop="true" id="847942" youtubeid="giMG9cVrkLs" category="chennai">

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சைகை மொழி பாடத்தை, பள்ளி கல்லூரியில் மொழி பாடமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

First published:

Tags: CM MK Stalin, MGR