Home /News /chennai /

கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்க பணிகள் : 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்

கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்க பணிகள் : 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாதிரி புகைப்படம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாதிரி புகைப்படம்

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட உள்ளதால் மெட்ரோ பணிகள் முடக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் முதல் கட்ட (phase-1) விரிவாக்க திட்டத்திற்கான அனுமதி தற்போது வரை பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த ஆண்டு  நவம்பர் மாதமே தமிழ்நாடு அரசின் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  (CMRL) சமர்ப்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதை பொறுத்தே மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெறும் என்பதால் மாநில நெடுஞ்சாலைகள் துறையுடன் தற்போது வரை  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வந்தது உத்தரவு!!..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு எளிதாக சென்றடைய மெட்ரோ இரயில் சேவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் இந்த மெட்ரோ இரயில் திட்டம் 2026 க்குள் முடிவடையும் என கூறப்பட்டிருந்த நிலையில் 10 மாதங்களாக விரிவாக்க திட்ட அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai Airport, Chennai metro, Metro rail route

அடுத்த செய்தி