Home /News /chennai /

அசல் சான்றிதழ்கள் இல்லாததால் மருத்துவ படிப்பை தொடர முடியவில்லை - உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை

அசல் சான்றிதழ்கள் இல்லாததால் மருத்துவ படிப்பை தொடர முடியவில்லை - உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Chennai | சான்றிதழகள் இருந்தால் தான் வேறு நாட்டுக்கு விசா வாங்க முடியும். எனவே பத்தாம் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்களை உக்ரைன் மாணவர்களுக்கு மீண்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். மீண்டும் உக்ரைனுக்கு சென்று படிக்கும் சூழல் இல்லாததாலும் இந்தியாவிலேயே மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லாததாலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் தங்கள் படிப்பை வேறு ஒரு நாட்டில் மீண்டும் முதலிருந்து தொடங்க முடிவு செய்து வருகின்றனர்.

ஓராண்டு கால படிப்பும் அதற்கான செலவும் வீணாகினாலும் பரவாயில்லை என இந்த முடிவை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்த மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் உக்ரைன் பல்கலைகழகங்களில் உள்ளன. அந்த சான்றிதழ்கள் இருந்தால் தான் வேறு நாட்டுக்கு விசா வாங்க முடியும். எனவே பத்தாம் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்களை உக்ரைன் மாணவர்களுக்கு மீண்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

போரில் தரைமட்டமாக்கப்பட்ட உக்ரைன் பல்கலைகழகங்கள் இன்னும் ஆன்லைன் மூலமே பாடம் நடத்துகின்றன. ஆன்லைன் மூலம் தொடர்ந்து படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் கூறும் நிலையில், இந்த படிப்பை தொடரலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருப்பதாக உக்ரைனில் படிக்கும் மாணவியின் தந்தை சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் கூறுகிறார்.

Also see...நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..!

மாணவர்கள் சிலர் உக்ரைன் வருவது குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தில் கேள்வி எழுப்பிய போது உக்ரைன் வருவதோ தங்குவதோ பாதுகாப்பல்ல என்று இந்திய தூதரகம் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு நாடுகளில் படிப்பை தொடர முடியாத உக்ரைன் மாணவர்கள், மீண்டும் உக்ரைனுக்கே திரும்பி செல்பவர்கள் என அனைவராலும் வெற்றிகரமாக உக்ரைன் சென்று சேர முடியவில்லை என்றும், சில மாணவர்கள் அருகில் உள்ள நாடுகளிலேயே சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் மாணவர் சேர்க்கை ஆலோசகர் மற்றும் ஏற்பாட்டாளர் கவுதம் கூறுகிறார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி