முகப்பு /செய்தி /சென்னை / தூய்மை பணியாளர்களின் மனஅழுத்தத்தை போக்க சென்னை மாநகராட்சி முன்னெடுத்த அசத்தல் நடவடிக்கை!

தூய்மை பணியாளர்களின் மனஅழுத்தத்தை போக்க சென்னை மாநகராட்சி முன்னெடுத்த அசத்தல் நடவடிக்கை!

தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்கள்

சென்னையில் தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க, மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த செய்தித்தொகுப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

பெருநகர சென்னை மாநகரம் தூய்மையாக இருக்க முக்கிய காரணம் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களின் இரவு பகல் பாராத உழைப்பு. சென்னையின் ஒவ்வொரு பொழுதும், குறிப்பாக பேரிடர் காலங்களிலும் சென்னை இயல்பாக இயங்க இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதேவேளையில் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம். இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

அவர்களின் மன அழுத்தத்தை போக்கி, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனியில் உர்பசேர் சுமீத் நிறுவனம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மதிய உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரத்தில் பொழுதைப் போக்கவும் உற்சாகமாகவும் இருக்க அவர்களுக்கு ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வறையில் அமர்ந்து சாப்பிடும் வசதி, தூய்மையான குடிநீர், இருவேளைகளில் டீ, காபி மற்றும் பிஸ்கெட் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் பொழுதைப் போக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் கேரம், செஸ் விளையாட்டுகள் மற்றும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை சிறந்த பணியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு, அவர் கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு குடும்பத்துடன் இலவசமாக சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

அதேபோல், தூய்மை பணியாளர்களுக்கு நேர்த்தியான உடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும் கூறுகிறார். உர்பசேர் சுமீத் நிறுவனத்தை சேர்ந்த ஹரிபாலாஜி. தூய்மை பணியாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்பை பெற்றுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai corporation, Chennai Corporation worker, Cleaning workers