ஹோம் /நியூஸ் /சென்னை /

ஓஎஸ்ஆர்  நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா? ஆக்கிரமிப்பில் உள்ளதா? கண்காணிக்க தணிக்கைக் குழு - மேயர் பிரியா உறுதி

ஓஎஸ்ஆர்  நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா? ஆக்கிரமிப்பில் உள்ளதா? கண்காணிக்க தணிக்கைக் குழு - மேயர் பிரியா உறுதி

மேயர் பிரியா

மேயர் பிரியா

சென்னை முழுவதும் ஓஎஸ்ஆர் நிலங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் மாமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள ஓஎஸ்ஆர்  நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா ஆக்கிரமிப்பில் உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 பிரிவு படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கான மனைப்பிரிவு 10ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள போது, அதில் 10% நிலத்தினை திறந்த வெளி நிலமாக  ஓஎஸ்ஆர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் பேசிய கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 95% ஓஎஸ்ஆர் நிலங்கள்  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஆக்கிரமித்துள்ள சூழலும் உள்ளது.

உதாரணமாக, மண்டலம் 10க்கு உட்பட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகள் (ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் சிம்ஸ் மருத்துவமனையில்) ஓஎஸ்ஆர் நிலங்கள் வாகனங்கள் நிறுத்தவும், சுற்றுச்சுவர் போட்டு நிறுவனமே பயன்படுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்டு  உள்ளது.

சென்னை முழுவதும் ஓஎஸ்ஆர் நிலங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் மாமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதிலளித்த மேயர் பிரியா,  ஓஎஸ்ஆர்  நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தனிக் குழு அமைப்பது  குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

First published:

Tags: Mayor Priya