முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மாமன்ற கூட்டம் இனி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்: சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை மாமன்ற கூட்டம் இனி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்: சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

ரிப்பன் மாளைகையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டம்

ரிப்பன் மாளைகையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டம்

Chennai Corporation Meeting | வார்டு அலுவலகங்களில் அனைத்து உறுப்பினர்களும் தேசியக்கொடி ஏற்றும் வகையில், கொடிக்கம்பங்களை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாமன்ற கூட்டம் இனி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், திருக்குறளுடன் மாமன்ற கூட்டம் தொடங்கப்படுகிறது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும், ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் சுதந்திர தினம், குடியரசு தினத்திற்கு தேசியக்கொடி ஏற்றும் வகையில் கொடிக்கம்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, அடுத்த மாமன்ற கூட்டம் கூடும்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் என்றார். மேலும், வார்டு அலுவலகங்களில் அனைத்து உறுப்பினர்களும் தேசியக்கொடி ஏற்றும் வகையில், கொடிக்கம்பங்களை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai corporation, Mayor Priya