மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கிரிதரன் ஆலப்பாக்கத்தில் களறி பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது பயிற்சி வகுப்பில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் களறி பயின்று வந்தனர். இந்நிலையில் கிரிதரன் பயிற்சி அளிப்பதை யூடியூப் சேனலில் வெளியிடும் பணி நடந்து வந்தது.
இதற்காக கிரிதரன் நேற்று மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கிரிதரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கிரிதரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கிரிதரன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் : சோமசுந்தரம், சென்னைஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.