சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மரபலகை பாதையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மரப்பலகை பலவீனமடையும் ஆபத்து உள்ளது.
உலகில் 2வது மிக நீளமான கடற்கரையை கொண்டது என்ற சிறப்புக்கு உடையது சென்னையில் உள்ள மெரினா கடற்கரை. தலைவர்கள் சமாதி, நீச்சல் குளம், தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் சிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மெரினா கடற்கரையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளும் மெரினா கடற்கரையின் எழிலை கண்டு ரசிக்க ஏதுவாக மரப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.
. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இதனை 2 தினங்களுக்கு முன்பு திறந்துவைத்தார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபலகையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். காலை வேளையில் நடைபயிற்சி செல்வோர்கள் மற்றும் பிற நேரங்களில் அதிகமானோர் இந்த நடைபலகையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'லஞ்ச் பிரேக் இல்லை.. கம்யூட்டர் ரெடியா இருக்கணும்..'' ஆதார் இணைப்பில் மின்வாரியம் முக்கிய உத்தரவு
இதனால், மாற்றுத்திறனாளிகள் மரபலகையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் மரபலகை விரைவாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இப்பாதையை பயன்படுத்துவரை அரசு உறுதிப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Marina Beach