முகப்பு /செய்தி /சென்னை / ரூ.20 லட்சம் கடன்... ஆன்லைன் ஆப் மூலம் வந்த ஆபத்து... மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த நபர்..!

ரூ.20 லட்சம் கடன்... ஆன்லைன் ஆப் மூலம் வந்த ஆபத்து... மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த நபர்..!

மாதிரி படம்

மாதிரி படம்

தனது குடும்ப செலவிற்காக  Navi, Early Salary, Money view, Smart Coin போன்ற ஆன்லைன் செயலிகள் மூலமாக 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கணபதி காலனி பகுதியைச் சார்ந்தவர் வினோத்குமார். இவர் மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது குடும்ப செலவிற்காக  Navi, Early Salary, Money view, Smart Coin போன்ற ஆன்லைன் செயலி மூலமாக 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அதை சரிவர கட்டாமல் மன உளைச்சலில் கடந்த ஒரு வருடமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு நீண்ட நேரமாக தனது மொபைலை பார்த்துக் கொண்டே இருந்த வினோத்குமார் திடீரென வீட்டில் இருந்த தனது அம்மாவிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி வாருங்கள் என்று  கடைக்கு அனுப்பி உள்ளார். குழந்தைகளிடம் தான் தூங்க செல்வதாக கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு சென்று திரும்பி வந்த வினோத்குமாரின் தாயார் தமிழ்ச்செல்வி, வினோத்குமாரை இரவு உணவு அருந்துவதற்காக நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து படுக்கையறையின் கதவை உடைத்து பார்த்தார். அப்போது புடவையால் மின்விசிறியில் வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

செய்தியாளர் : சுரேஷ்

First published:

Tags: Chennai, Commit suicide, Loan app, Loan applications, Suicide