முகப்பு /செய்தி /சென்னை / கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காத மனைவியை கொன்ற கணவன்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காத மனைவியை கொன்ற கணவன்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் தனது மனைவியை கொலை செய்து கைதானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்.  இவர் கடந்த  2008-ம் ஆண்டு  அம்மு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். ஸ்ரீனிவாசன் தினமும் வேலைக்கு போகாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, அம்முவுக்கும், அவரது உறவினர் சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீனிவாசன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீனிவாசனுடன் இணங்க மறுத்த அம்மு, தனது உறவினர் உடன் மட்டும் இல்லற வாழ்க்கை நடத்த முடியும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்ரீனிவாசன், அம்முவை கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச். முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அம்முவை திட்டமிட்டு ஸ்ரீனிவாசன் கொலை செய்யவில்லை என்பது உறுதியாவதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

First published:

Tags: Chennai, Crime News, Extramarital affair, Husband jailed