தாம்பரம் காவல் ஆணையர் சரகத்திற்குட்பட்ட செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகிநகர் உள்ளிட்ட புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து செம்மஞ்சேரி உதவி ஆணையர் ரியாசுதீன் மேற்பார்வையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவலர்கள் அருண்குமார், நாகராஜ், கௌதம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பெரும்பாக்கம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் 50-வயதான மனோராம் என்பவர் கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்தது தேடுதல் வேட்டையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த தனிப்படையினர் கஞ்சா வாங்கும் வியாபாரிபோல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கஞ்சா மொத்த வியாபாரியை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு கிலோ கஞ்சா வேண்டும் என்றும் அதற்கான ரூபாய் எவ்வளவு என்பதை கேட்டுள்ளனர். ஒரு கிலோ கஞ்சா ரூபாய் 20,000 என கூறியதை தொடர்ந்து பணத்தை தயார் செய்து அவர் செல்போனில் கூறிய இடத்திற்கு சென்று வியாபாரிபோல் நடித்து அவரை கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் வாகனத்தில் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டதில் அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படையினர் அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் அவர் 22 வருடமாக சென்னை புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். வெல்டிங் வேலை செய்யும் இவர் கடந்த சில வருடங்களாக சென்னை புறநகர் பகுதியில் மொத்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், சென்னையிலிருந்து ஊருக்கு சென்று அங்கிருந்து மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு ரயிலில் திரும்போது கஞ்சாவை மூட்டை மூட்டையாக கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
ஊருக்கு சென்று குடும்பத்துடன் சென்னைக்கு வருவதுபோல் ரயிலில் கஞ்சா கிலோ கணக்கில் கடத்தி வந்ததாக விசாரணையில் கூறியதை கேட்ட தனிப்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் விசாரணையில் குடும்பத்துடன் ஒரு பகுதியில் வடகைக்கு தங்கியிருப்பதும், கஞ்சா விற்பனைக்கென ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது வீட்டில் 6 கிலோ கஞ்சா இருந்தது. தனிப்படையினர் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடமிருந்து கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Also see... சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கியது...
கஞ்சா வியாபாரிபோல் நடித்து மொத்த கஞ்சா வியாபாரியை சதுரியமாக கைது செய்த செம்மஞ்சேரி உதவி ஆணையர் ரியாசுதீன், பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவலர்கள் அருண்குமார், நாகராஜ், கௌதம் ஆகியோர் கொண்ட தனிப்படையினரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cannabis, Chennai, Crime News, Odisa