முகப்பு /செய்தி /சென்னை / பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. மக்கள் கூடும் பூங்காவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. மக்கள் கூடும் பூங்காவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

கோப்பு படம், மாதிரி படம்

கோப்பு படம், மாதிரி படம்

நடந்தது கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

முகப்பேரில் உள்ள மங்கள் ஏரி பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி ராஜு (31) என்பவர், பெண்கள் கழிவறையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் மேற்கில் மங்கள் ஏரி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் அரக்கோணத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் ராஜு (31) பராமரிப்பு பணிகள் செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் அந்த பூங்காவில் உள்ள பெண்கள் கழிவறையில் தூக்கிட்டு தொங்கியபடி இறந்துகிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை கண்கானிப்பு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை.. கொடைக்கானலில் சிக்கிய பெங்களூரு இளைஞர்

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை நொளம்பூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜுவின் உடலை கைப்பற்றிய நொளம்பூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடந்தது கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் காலை, மாலை வேலையில் ஆயிரக்கணக்கானோர் நடை பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தக்கூடிய பூங்காவின் கழிவறையில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: கண்ணியப்பன்

First published:

Tags: Chennai, Crime News