ஹோம் /நியூஸ் /சென்னை /

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் துப்பாக்கியை காட்டி மாமூல் வசூல் செய்தவர் கைது...

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் துப்பாக்கியை காட்டி மாமூல் வசூல் செய்தவர் கைது...

செல்வம் - மாமூல் வசூல் செய்தவர்

செல்வம் - மாமூல் வசூல் செய்தவர்

Poonamallee | பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள  கடைகளில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மாமூல் வசூல் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Poonamallee, India

  சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் மிரட்டி மாமூல் வசூலிப்பதாகவும்,   கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும் கோயம்பேடு துணை ஆணையர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து தனிப்படை போலீசார், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது செல்வம் வந்து மாமூல் வசூலித்து சென்றது தெரிய வந்தது..

  இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

  அவரிடமிருந்து டம்மி துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் வெடி மருந்து 200 கிராம் , ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் எனவும், இவர் மீது வேறு எங்கெங்கு வழக்குகள் உள்ளன எனவும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Gun shoot, Poonamallee Constituency