சென்னை தரமணியை அடுத்த திருவேங்கடம் நகரில் வெங்கட் சாய் என்ற தங்கும் விடுதி உள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விடுதிக்கு சென்ற வாலிபர் ஒருவர் வெகு நேரமாக நோட்டமிட்டு பின்னர் முதல் தளத்திற்கு சென்று அங்கு அறையில் தங்கி இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது நான் கீழ் தளத்தில் புதிதாக வந்து தங்கி இருக்கிறேன் என்று முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பின்னர் எனது அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 பணம் அனுப்ப வேண்டும். எனது கையில் பணம் இல்லை, இந்த நேரத்தில் எனது கூகுள்-பே ஆப் லாக் ஆகி விட்டது. நீங்கள் கூகுள்-பே வில் பணம் அனுப்பினால் நன் ATM-ல் பணத்தை எடுத்து தருகிறேன் என்று அப்பாவியாக பேசியுள்ளார். வாலிபரின் மோசடி ஏமாற்று பேச்சை நம்பிய அவர்கள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூபாய் 5,000 அனுப்பியுள்ளனர்.
மேலே வசிப்பவர்களிடம் நைசாக பேசி பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், பின்னர் கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் சென்று ‛நான் மேல் தளத்தில் புதிதாக வந்துள்ளேன். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்’ என அதே ஏமாற்று பாணியில் நைசாக பேசி அவர்களிடமும் ரூபாய் 5,000 கூகுள்-பே மூலம் அனுப்ப வைத்துள்ளார்.
Also Read: திண்டுக்கல்லில் மாடுப்பிடி வீரர் கொடூரக் கொலை... கல்லால் கட்டி உடலை கல்குவாரியில் வீசிய பயங்கரம்
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் தங்கும் விடுதியில் வசிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ரூபாய் 40,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம், நான் ATM வாசலில் நிற்கிறேன். முன்னதாக அனுப்பிய அதே கூகுள்-பே விற்கு ரூபாய் 40,000 அனுப்பி விடுங்கள். பணத்தை உடனே எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார். அதையும் நம்பிய விடுதியில் தங்கி இருந்த நான்கு பேர் ரூபாய் 40,000 அனுப்பி உள்ளனர்.
வெகு நேரமாகியும் அந்த வாலிபர் வராததால் சந்தேகமாக தேடி சென்றபோது வாலிபர் விடுதியில் தங்கவில்லை என்பதும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதையும் உணர்ந்துள்ளனர் அந்த இளைஞர்கள். பின்னர் விடுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தியிறுந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை கைபற்றி அந்த மோசடி நபரின் புகைப்படத்தை இதர விடுதிகளில் தங்கி உள்ள நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கையாக இருக்க கூறினர். மேலும் சிசிடிவி காட்சிகளுடன் தரமணி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த வாலிபர் அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவரை பிடித்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 22-வயதான சச்சின்குமார் என்பதும் அவருடைய கூகுள்-பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது இதேபோன்று பலரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சச்சின்குமார் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Google pay