ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் : கணபதி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!

சென்னையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் : கணபதி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு

Malabar Gold & Diamonds | மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமை சென்னை மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி திறந்து வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழகத்தில் தனது 19வது புதிய ஷோரூமை சென்னை போரூரில் திறந்துள்ளது.

  பிரபல தங்கம் மற்றும் வைர நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 19வது புதிய ஷோரூமை கடந்த அக்டோபர் 20ம் தேதி சென்னை போரூரில் திறந்துள்ளது.

  அதிகமான இட வசதி, அதிகமான மாடல்கள் மற்றும் டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை சென்னை மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி திறந்து வைத்தார். இந்த புதிய ஷோரூம் மவுண்ட் பூந்தமல்லி சாலை ஜிகே சினிமாஸ் எதிரில் போரூரில் அமைந்துள்ளது.

  இதையும் படிங்க : பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்திய அரசு வங்கி..விட்ராதீங்க!

  இந்நிகழ்ச்சியில் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அஷர், சில்லறை விற்பனை தலைவர் சிராஜ், தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மண்டல வணிக தலைவர் சபீர் அலி,  வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மேற்கு மண்டல தலைவர் நௌசாத், தெற்கு மண்டல தலைவர் சுதீர் அகமது, போரூர் கிளை இணை தலைவர் சுஹைல், மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Gold, Tamilnadu