ஹோம் /நியூஸ் /சென்னை /

அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி? ஆலோசனையை தொடங்கிய கமல்ஹாசன்.. வேகமெடுக்கும் மக்கள் நீதி மய்யம்!

அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி? ஆலோசனையை தொடங்கிய கமல்ஹாசன்.. வேகமெடுக்கும் மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

Makkal neethi mayyam | 85 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்துக்கொண்டு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

  85 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

  நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளைக் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

  ALSO READ | பிரியா மரணத்துக்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம்- சீமான் கண்டனம்

  கிளை அளவில் கட்சியை பலப்படுத்தவும், கடந்த முறை தேர்தல்களில் செய்த தவறுகளை வரும் தேர்தலில் செய்யக்கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

  ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கூட்டணி குறித்து விவாதித்துக்கொண்டு இருப்பதாகவும் அதைத் தற்போது விவரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Kamalhaasan, Makkal Needhi Maiam