ஹோம் /நியூஸ் /சென்னை /

வாகன ஓட்டிகளே உஷார்... சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!

வாகன ஓட்டிகளே உஷார்... சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

சென்னையில் முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் காரணத்தினால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாம்பலம் பிரதான சாலையில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் காரணத்தினால் போக்குவரத்து சேவை சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது சோதனை வெற்றி பெற்ற காரணத்தினால் மேலும் 15 மாதங்களுக்குப் போக்குவரத்து சேவை மாற்றியமைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

மாம்பலம் பிரதான சாலையில் ( கோடம்பாக்கம் மெட்ரோ ஸ்டேசன்) சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 25.12.2022 முதல் ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால் மேலும் 09.01.2023 முதல் 07.04.2024 வரை மேலும் பதினைந்து மாதங்கள் போக்குவரத்து மாற்றங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பாதைகள்:

1. மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

2. மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

Also Read : கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்த அமைச்சர் துரைமுருகன்...கண்ணீர் விட்ட டி.ஆர்.பாலு..!

3. மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல், தற்போது ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ற வாகன ஓட்டுநர்களை ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

First published:

Tags: Chennai Traffic, Metro Rail