முகப்பு /செய்தி /சென்னை / மதுரவாயலில் உணவு டெலிவரி உடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது

மதுரவாயலில் உணவு டெலிவரி உடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன்

கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன்

Maduravoyal Kanja Delivery Boy Arrest | ஆலப்பாக்கம் எம்ஜிஆர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் உணவு டெலிவரி உடை அணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மதுரவாயலில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்து கொண்டு  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலில் ஆங்காங்கே  ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதுபோல்  கஞ்சா டெலிவரி செய்வதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் ஆலப்பாக்கம் எம்ஜிஆர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்ற வாலிபரை ஜொமாட்டோ உடை அணிந்து மோட்டர் சைக்கிளில் வந்த அவரை  மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வன் ஜொமாட்டோவில்  ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வதுபோல் வேலை செய்து கொண்டு கஞ்சா டெலிவரி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த அவரை கைது செய்த போலீசார் பையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் டெலிவரி செய்ய பயன்ப்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு  பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைத்தனர். உணவு டெலிவரி செய்வதுபோல் மேலும் ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தகவல் வந்துள்ளாதால் , போலீசார் தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர்: சோமசுந்தரம்

First published:

Tags: Chennai, Crime News