Home /News /chennai /

உடலுறவின்போது ஏற்பட்ட விபரீதம்: திருமணமான 5 மாதத்தில் கணவன்,மனைவி தற்கொலை

உடலுறவின்போது ஏற்பட்ட விபரீதம்: திருமணமான 5 மாதத்தில் கணவன்,மனைவி தற்கொலை

புதுமண தம்பதி தற்கொலை

புதுமண தம்பதி தற்கொலை

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது கணவரின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குழந்தை பிறக்காது என மன உளைச்சலில் அவர்கள் இருந்து வந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    மதுரவாயலில் திருமணமான 5 மாதத்தில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். கணவனின் ஆண்குறி நரம்பு உடைந்ததால் குழந்தை பிறக்காது  என மன உளைச்சலில் இருந்துவந்த நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டது கடிதம் மூலம் தெரியவந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேந்த 22 வயது  நபர் ஒருவர் , சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி  பழைய இரும்புகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயது பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில்,ம் நேற்று  உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது அவர்கள்  செல்போனை  எடுக்கவில்லை, கடையும் அடைக்கப்பட்டு இருந்தது.  வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து கதவை தட்டியும் திறக்காததால் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில்  தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து  கிடந்துள்ளனர்.

    இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது,  தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.  கடிதத்தில் "எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை" என  கணவர், மனைவி ஆகியோரின் கையெழுத்து இருந்து.

    இதையும் படிங்க: என் சாவுக்கு தனியார் வங்கிதான் காரணம் - உருக்கமாக வீடியோ வெளியிட்டு ஜவுளிவியாபாரி தற்கொலை

    திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது கணவரின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையை  அணுகாமல் அவர்கள் இருந்துவந்ததோடு, தங்களுக்கு இனி குழந்தை பிறக்காது எனவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். திருமணம் ஆகி 5 மாதத்தில் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் ,பரபரப்பை ஏற்படுத்தியது..

    செய்தியாளர்: சோமசுந்தரம்- பூந்தமல்லி

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Murugesh M
    First published:

    Tags: Commit suicide, Couple

    அடுத்த செய்தி