ஹோம் /நியூஸ் /சென்னை /

வாக்குப்பதிவின்போது வன்முறை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ரத்து!

வாக்குப்பதிவின்போது வன்முறை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ரத்து!

வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டம்

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சங்கத்தின் தேர்தல் வழக்கு காரணமாக 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வன்முறையால் ரத்து செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கம்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்தில் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சங்கத்தின் தேர்தல் வழக்கு காரணமாக 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

பின்னர், தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய சில நேரங்களையே அங்கு பிரச்சனை ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து வாக்குச்சீட்டுகளை மொத்தமாக எடுத்துச் சென்றதாக செய்தி பரவியது.

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அருகே இருந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிக்குள் இருந்த பொருட்களும் உடைக்கப்பட்டது. பின்னர், சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர்.

இதை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி கபீர் அறிவித்தார். பின்னர், செய்தியாளர்கள் பேசிய கபீர், வாக்குச்சாவடிக்குள் ஆத்துமீறி நுழைந்த வழக்கறிஞர்களை சிசிடிவி கேமரா மூலமாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பவம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதியிடன் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai High court, Election, Lawyers