முகப்பு /செய்தி /சென்னை / திருமணமாகி மகிழ்ச்சியாக இருப்பதாக பெண் வாக்குமூலம்; இளைஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

திருமணமாகி மகிழ்ச்சியாக இருப்பதாக பெண் வாக்குமூலம்; இளைஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

நீதிபதி முன் தனது குழந்தையுடன் ஆஜரான அந்த பெண், திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக வாலிபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த  சூரஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020ம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்த பெண் 18 வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த மனு நீதிபதி  சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது குழந்தையுடன் ஆஜரான அந்த பெண், திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக கூறினார்.

மேலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துகொண்டதாக பெண்ணின் தாயாரும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டிய போலி டாக்டர்!

இதையடுத்து,   சூரஜ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, இது இருவரின் தனிப்பட்ட விவகாரம் என்பதாலும், இருவரும் இளம் வயதுடையவர்களாக இருப்பதால் வழக்கை தொடர்ந்து நடத்துவது மன உளைச்சலையே ஏற்படுத்தும் என்பதாலும் சூரஜ் மீதான வழக்கை ரத்து செய்வதாக  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Madras High court, Minor girl, POCSO case