Home /News /chennai /

இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு

இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

Chennai |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்  அணியை சேர்ந்த ஜே சி டி பிராபகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்களை தாக்கியதாகவும் குறிபிட்டுள்ளார். அலுவலகத்திற்குள் உள்ள  முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்ததாகக் கூறியுள்ளார்.

நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

Also see...  கட்டப்படாத மருத்துவமனைக்கு சான்றிதழ்... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் ரெய்டின் பின்னணி

இந்த மனுவை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Chennai High court, OPS - EPS

அடுத்த செய்தி